பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 14 வரை திருவிழா நடக்கவுள்ளது. கபிலர்மலை வட்டாரத்திலேயே, மிகவும் பிரசித்திபெற்ற பாலதண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச தினத்தன்று சுற்றுவட்டார பகுதியிலுள்ள பக்தர்கள் காவடி, தீர்த்தம் எடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அதையொட்டி ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என்பதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.