பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
கொடுமுடி: புது மாரியம்மன் கோவில் திருவிழா, மஞ்சள் நீராட்டத்துடன் இன்று நிறைவடைகிறது. கொடுமுடி, புது மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 24ல் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது. இதில் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தம், பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். புது மாரியம்மன் புனித நீர் ஊற்றப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மாலை, 6:00 மணியளவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி, பிரமாண்ட வாணவேடிக்கை நடந்தது. இன்று (3ம் தேதி) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.