பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
காடையாம்பட்டி: காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் தேரோட்டம், நேற்று, கோலாகலமாக நடந்தது. சேலம், காடையாம்பட்டி ஒன்றியம், குப்பூர் காளியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 17ல் துவங்கி, தினமும், அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து, கோழி, ஆடுகளை வெட்டி வழிபட்டனர். நேற்று மாலை, 5:30 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்று, கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில், குப்பூரை சுற்றியுள்ள ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல், ஓமலூர், பல்பாக்கி யில், நேற்று மாலை, மாரியம்மன் கோவில் விழாவில் தேரோட்டம் நடந்தது.