பவானி: ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. பவானி, சித்தோடு காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கடந்த, 23ல் கும்பாபிஷேக விழா துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நான்கு யாக கால பூஜை முடிந்த பின், நேற்று காலை, 8:45 மணிக்கு காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பவானி, சித்தோடு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.