பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபி ஷேக விழாவை முன்னிட்டு, வரும், 6ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என, கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு, வரும், 6ல், மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களுக்கு விடுமுறையாகும். இதற்கு பதிலாக, வரும், 18 அன்று வேலை நாளாகும். உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு, அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ள மக்கள் குறை தீர் கூட்டம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறாது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், குறைந்தபட்ச எண்ணிக்கை உடைய ஊழியர்களை கொண்டு இயங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.