நங்கவள்ளி: நங்கவள்ளி அருகே, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நங்கவள்ளி அடுத்த, சாணாரப்பட்டி பஞ்சாயத்து, தானாபதியூரில், ஓம்சக்தி மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, கடந்த, 27ல் துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை, விநாயகர் வழிபாடு மற்றும் காவிரி நதிநீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலை, முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, விமானங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய மாரியம்மனுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.