ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் திருவேங்கடமுடையான் கோயில் மற்றும் காளியம்மன் கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஆண்டாள்கோயிலுடன் இணைந்த நாடகசாலை தெருவில் உள்ள ஸ்ரீதிருவேங்கடமுடையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் ராமானுஜர், நம்மாழ்வார், கருடாழ்வார், ராமானுஜர் ஆகியோர்களுக்கு நேற்று காலை 10 மணிக்குமேல் கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணபட்டர்,சேஷாத்ரி, ரமேஷ்பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.