பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
திருப்பூர்: நொய்யல் ஆறு தடுப் பணை, நல்லம்மன் கோவில் மற்றும் வேட்டுவபாளையம் ஸ்ரீ காரணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, பிப்.,2 கோலாகலமாக நடந்தது.
திருப்பூர், மங்கலம் அருகே, நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில், நல்லம்மன் கோவில் உள்ளது. அணை உடையாமல் தடுக்க, சிறுமி உயிர்விட்ட தியாக வரலாறு கொண்ட இத்தலத்தில், கன்னி தெய்வமாக, சுயம்பு சக்தியாக நல்லம்மன் எழுந்தருளி அருள்பாலித்து
வருகிறார். இக்கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள், துவங்கியது. பிப்.,3 காலை, இரண் டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், நிறை வேள்வி, மகா தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, ஞான உலா நடந்தது.
தொடர்ந்து, ஸ்ரீ கற்பக விநாயகர்: ஸ்ரீ கன்னிமார் மற்றும் ஸ்ரீ நல்லம்மனுக்கு, புனித நீர் கொண்டு, வேத மந்திரங்கள் முழங்க, பம்பை இசை ஒலிக்க, சிவாச்சார்யார்கள் மகா கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. தச தரிசனம், மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
ஸ்ரீ காரணப்பெருமாள்: திருப்பூர் மங்கலம் அருகே, வேட்டுவபாளையத்தில், நூற்றாண்டு பழமையான, ஸ்ரீ காரணப்பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ காரணப்பெருமாள், இங்கு எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கன்னிமார் ஆகியோருக்கும், தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, பிப்.,2 முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த கலச ஊர்வலத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. பிப்.,3 காலை, யாத்திரா தானம், கும்ப உத்வாஸனம், மகா சம்ப் ரோஷனம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, பட்டாச்சார்யார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கவலை தீர்க்கும் காரணப்பெருமாள் கோவில் கலசங்களுக்கும், மூலவருக் கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள், "கோவிந்தா.. கோவிந்தா.. என்று கோஷமிட்டவாரே வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஆறுபடை முருக பக்தர்கள் பேரவை சார்பில், அன்னதானம் நடைபெற்றது.