பதிவு செய்த நாள்
04
பிப்
2017
01:02
மோகனூர்: செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். மோகனூர் அடுத்த, எம்.ராசாம்பாளையத்தில், செல்வ விநாயகர், கொங்கலாயி, கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி,
மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. அப்பணி முடிந்ததும், கும்பாபிஷேகம் செய்ய விழா குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பிப்.,3 காலை, 8:30 மணிக்கு, செல்வ விநாயகர், கொங்கலாயி, கருப்பண்ணசாமி ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.