பதிவு செய்த நாள்
04
பிப்
2017
02:02
நாமகிரிப்பேட்டை: சிங்களாந்தபுரம், அண்ணமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அடுத்த, சிங்களாந்தபுரத்தில், காக்காவேரி அண்ணமார் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதில் விநாயகர் கோவில், சின்னண்ணன், பெரியண்ணன், தங்காய், பெரியாண்டியம்மன், கன்னிமார், கருப்பண்ணசாமி ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், கலசங்களுக்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. 6:00 மணிக்கு மேல், கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, தீபாராதனையுடன்
பிரசாதமும் வழங்கப்பட்டது.