பதிவு செய்த நாள்
04
பிப்
2017
02:02
ஈரோடு: கோட்டை பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர். ஈரோடு, கோட்டை சின்னப்பாவடி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 30ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, குண்டம் இறங்குதல்
பிப்.,3 காலை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கோவில் தலைமை பூசாரி மணிகண்டன் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், என, 1,000த்துக்கு மேற்பட்டோர், ஓம் சக்தி... பராசக்தி என, கோஷமிட்டபடியே தீ மிதித்தனர். போலீசார் சிலரும் சீருடையுடன் குண்டம் இறங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதியுலா சென்றது. இரவு மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது.