பதிவு செய்த நாள்
06
பிப்
2017
10:02
திருவண்ணாமலை: வேத மந்திரம் முழங்க திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதில் தென்ஆசியாவில் இரண்டவாது கோவில் கோபுரமான 217 அடி உயரம் உள்ள இராஜ கோபுரத்தில் உள்ள கசலத்திற்கு புனிதநீரை ஊற்றிய பின் சிவாச்சார்யார் தீபாரதனை செய்தனர். இராஜ கோபுர கும்பாபிஷேகத்தை , அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 2002ல் நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, 50 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரம், மூலஸ்தானம், அருணாச்சலேஸ்வரர் விமானம் மற்றும் மூலவர் உட்பட, 59 சன்னிதிகளுக்கு, காலை, 9:05 முதல், 10:30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, மூன்று, ஐ.ஜி.,க்கள் தலைமையில், 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.