பதிவு செய்த நாள்
06
பிப்
2017
12:02
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடந்தது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. முன்னதாக, உற்சவ மூர்த்தியான அழகிரிநாதருக்கும், ஆண்டாள் தாயாருக்கும், பல்வேறு வித வாசனை திரவியங்கள் மூலம், சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. பல்வேறு வித மலர்களில், மாலை தொடுத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரு சுவாமிகளையும், திருமண மேடைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மஹா ஹோமம் நடந்தது. பின், பெருமாளுக்கும், தாயாருக்கும், கங்கன கயிறு கட்டப்பட்டு, திருமண ஆடை அணிவித்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், மாங்கல்யத்தை காட்டி, ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து, சூடிகொடுத்த சுடர் மாலை, அழகிரிநாதருக்கு சாத்துபடி செய்யப்பட்டது.