பதிவு செய்த நாள்
06
பிப்
2017
12:02
ப.வேலூர்: கபிலர்மலை பாலதண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேரை தயார்ப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 2ல், கொடியேற்றம் நடந்தது. வரும், 10ல், மாலை, 4:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக, பாலதண்டாயுதபாணி சுவாமி வலம் வரும் தேரை சுத்தப்படுத்தி, தேரோட்டத்திற்கு தயாராக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வர உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் அதிகப்படுத்தி உள்ளனர். விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சாந்தி, திருத்தேர் விழாக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.