பதிவு செய்த நாள்
06
பிப்
2017
12:02
திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் பிப்.,8ல் சவுமியநாராயணப்பெருமாள்-ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண மகோற்சவம் துவங்குகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தை மாதம் திருக்கல்யாண மகோற்சவம் ஐந்து நாட்கள் நடைபெறும்.பிப்.,8 மாலை 4:20 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் பெரிய சன்னதியில் எழுந்தருளலும்,இரவு 7:00 மணிக்கு பெரியபெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்னத்துடன் திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளல், தைலம் திருவீதி சுற்றுதல், தைலம் சாத்துதல்,நவகலஸ அலங்கார சவுரித் திருமஞ்சனம்,திருவீதி புறப்பாடும், 3வது நாளில் ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை, 4வது நாளில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும்,தொடர்ச்சியாக முத்துக்குறி பார்த்தல், 5வது நாளான பிப்.,12ல் பெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளி,பெரியாழ்வார் எதிர் கொண்டு அழைத்தலும், ஆண்டாள் அங்குமணித் திருவீதி புறப்பாடு,ஊஞ்சல் மாலை மாற்றுதல், தொடர்ந்து மாலை 8:30 மணிக்கு பெருமாள்-ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.