தாமிரபரணி ஆற்றில் கிடைத்த நந்தி சிலை: கிராம மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2017 01:02
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுார் அருகே முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் கிடைத்த நந்தி சிலையை எடுத்த பொது மக்கள் வழிபாடு நடத்தினர். செய்துங்கநல்லுார் அருகே முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வற்றியது. அப்போது ஆற்று மணல் பகுதியில் நந்தி சீலையின் முதுகு பகுதி மட்டும் வெளியில் தெரிந்தது. சிலையை கண்ட பொது மக்கள் அதனை தோண்டி எடுக்க ஏற்பாடு செய்தனர். முன்னாள் ஊராட்சித்துணைத்தலைவர் நடராஜன் தலைமையில், மணல் அள்ளும் இயந்திரம் கொண்டு தோண்டினர். இதில் பிரம்மாண்டமான வேலைப்பாடுகளுடன் கூடி நந்தியின் கல்சிலை கிடைத்தது. இதனை எடுத்து வந்த கிராம மக்கள் கிராமத்தின் மத்தியில் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். நடராஜன் தெரிவித்ததாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் நீர் வற்றியபோது இது போல சிலை தென்பட்டது. அதனை எடுக்கும் முன்பு, மீண்டும் ஆற்றில் வெள்ளம் வந்து சிலைகளை மூடி விட்டது. தற்போது சிலை தெரிந்த போது அதனை தோண்டி எடுத்துள்ளோம். தற்போது கிராமத்தில் வைத்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். தொல் பொருள் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.