கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் 80 ஆண்டு பிரம்ம உற்சவ விழா தொடங்கியது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர்கோவலில் பிரம்ம உற்சவ திருவிழா தொடங்கியது.இதனையொட்டி செல்வவிநாயகர் மற்றும் வள்ளிதேவசேனா,சுப்பிரமணிய சுவாமிகளுக்கும்,ஞானாம்பிகை அம்மன் மற்றும் மூலவர் ராமநாதீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார்கள் சந்திரசேகர்,பாலகிருஷ்ணன், ஓதுவார்கள் பழனியாண்டி,கிருஷ்ணமூர்த்தி மற்றும் முத்தையாப்பிள்ளை அறக்கட்டளை ஆகியோர் செய்திருந்தனர். செல்வம் குழுவினரின நாதஸ்வரக் கச்சேரி நடைபெற்றது.