ஏடகநாதர் கோயிலில் பிப்.11ல் பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2017 11:02
திருவேடகம்: திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் பிப்.,11ல் பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா நடக்க உள்ளது. கி.பி.7ம் நு ாற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் திருஞானசம்பந்தரால் வைகை ஆற்றில் இடப்பட்ட வாழ்க அந்தணர் திருபாசுர ஏடு எதிரேறிய புண்ணியதலமாகும். வள்ளலாரும் புகழ்ந்து பாடிய தலம். இக்கோயிலின் தெப்பத்திருவிழா பிப்.,11 ல் நடக்கிறது. அம்மனும், சுவாமியும் அன்று காலை 10:30 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளுவர். மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 5:00 மணிக்கு விளக்குபூஜை, இரவு 7:00 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நேற்று காலை பிரம்மன் தபசு நிகழ்ச்சியுடன் இத்திருவிழா துவங்கியது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் செய்து வருகிறார்.