பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனைகளின் சுவர்களில், சமஸ்கிருத சுலோகங்களை எழுத திட்டமிடப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த, வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காளிச்சரண் சரப், ஜெய்ப்பூரில் நேற்று கூறியதாவது:ராஜஸ்தான் முழுவதும், 17 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளன. இவற்றின் சுவர்களில், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்கள், புராணங்கள், ராமாயணம், மகாபாரத இதிகாசங்களின் சுலோகங்கள், ஹிந்தி மொழியாக்கம் செய்து எழுதப்படும். சமஸ்கிருத சுலோகங்கள், பிரார்த்தனை, எழுச்சி ஊட்டல், புத்துணர்வு அளித்தல் ஆகிய மூன்று பிரிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மருத்துவமனை சுவர்களில் எழுதப்பட உள்ளன. சுலோகங்களை தேர்வு செய்வதற்காக, சிறப்புக்குழு அமைக்கும்படி, சமஸ்கிருத அகாடமிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.