திருவூர்: திருவூரில் உள்ள குமரன் மற்றும் வள்ளலார் கோவிலில், வரும் 9ம் தேதி, தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்துள்ளது திருவூர். இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத வள்ளல் குமரன் கோவிலில், வரும் 9ம் தேதி, தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. அன்று, காலை 9:00 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். இதேபோல், இப்பகுதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலிலும், காலை 10:00 மணிக்கு, திருஅருட்பா அகவல் பாராயணமும், பகல் 12:00 மணிக்கு, ஜோதி தரிசனமும் நடைபெறும்.