மேலுார்: மேலுார் அருகே ஆமூரில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள அய்யம்பொழில் ஈஸ்வரர் கோயில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. தக்கார் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் திருவாதவூர், கட்டையம்பட்டி, பூஞ்சுத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.