தாயுமானசுவாமி கோயில் கும்பாஷேகம் யாகசாலை பூஜை இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2017 02:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லட்சுமிபுரம் தாயுமானசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது. ராமநாதபுரம் லட்சுமிபுரம் தாயுமானசுவாமி கோயிலை திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நிர்வகித்து வருகிறது. இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் உள்ளது. இதையடுத்து 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் இன்று(பிப்., 7) காலை 8:30 மணிக்கு துவங்குகிறது. மாலை 4:30 மணிக்கு முதல் யாக பூஜை நடக்கிறது. நாளை(பிப்., 8) காலை 9:30 மணிக்கு 2ம் கால யாகபூஜை, மாலை 6:30 மணிக்கு 3ம் கால யாக பூஜை நடக்கிறது. பிப்., 9 காலை 5:30 மணிக்கு 4ம் கால யாக பூஜைக்கு பின் காலை 7:45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. 8:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம், 10:45 மணிக்கு மகா அபிஷேகம், 11:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ராமகிருஷ்ண தபோவன பவள விழா நிர்வாகிகள் செய்துள்ளனர்.