பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
பவானி: பவானி, நசியனூர் சின்னமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பவானி, நசியனூர், நடுவீதியில் உள்ள கணபதி, சின்னமாரியம்மன் கோவிலில், கடந்த, 3ல், கிராமசாந்தி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. பின்னர் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:30 மணிக்கு மேல், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பவானி, சித்தோடு, நசியனூர் உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.