சிவகாசி: சிவகாசியில் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்று மாரியம்மன் கோயில். இங்கு பங்குனி விழாவில் திரளான பக்தர்கள் தீச்சட்டி, மாவிளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர். கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதையொட்டி வருஷாபிஷேகம், மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஸ்ரீ திரிசூல ஸ்தாபிதம், நீராழி மண்டபத்துடன், தெப்பக்குளமும் திறக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவத்துடன், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.