பதிவு செய்த நாள்
09
பிப்
2017
11:02
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மாசி மண்டல உற்சவ வாஸ்து சாந்தி நாளை (பிப்.,10) இரவு நடக்கிறது. கொடியேற்றம் பிப்.,11ல் காலை 8:00 மணிக்கு மேல் காலை 9:00 மணிக்குள் நடக்கிறது. பிப்.,13ல் சந்திரசேகர் உற்சவம் முடிந்து மார்ச் 2ல் சுற்றுக்கொடியேற்றம் ஆகி மார்ச் 11 வரை காலை, இரவில் அம்மனும், சுவாமியும் சித்திரை வீதிகளில் திருவீதி உலா வந்து கோயில் சேர்த்தியாகும். மார்ச் 21ல் கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெற்று உற்சவம் நிறைவடையும். பிப்.,24 முதல் மார்ச் 11 வரை, கணக்கு வாசித்தல் நாளான மார்ச் 21 ஆகிய நாட்களில் கோயில் சார்பாகவும், உபயமாகவும் மீனாட்சி அம்மனுக்கு உபய தங்கரதம் உலா, உபய திருக்கல்யாணம் பதிவு செய்து நடத்திட இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.