காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது. இதற்காக, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 9:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, லட்சக்கணக்கான மக்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமாட்சி அம்மன் கோவில் நான்கு கோபுர பகுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தரிசனம் செல்லும் வழியில், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. கோவில் உட்பகுதியில் பக்தர்கள் வசதிக்காக, இரு மருத்துவர்களை கொண்ட மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, காந்தி சாலையில் அமைந்துள்ள, வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 8:00 மணிக்கு நடக்கிறது. அதற்காக காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.