பதிவு செய்த நாள்
09
பிப்
2017
02:02
சேலம் : சேலத்தில், ராமானுஜரின், 1,000வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அம்மாபேட்டை, அன்புக்கரசு மெத்தை அருகே, அலங்கார பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, காலை, 9:00 மணிக்கு சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, ராமானுஜர் சிலையை எடுத்து வந்து, பந்தலில் வைக்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு, திருமஞ்சனம், சிறப்பு ஆராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, பந்தலில் இருந்து, மீண்டும் சவுந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு, ராமானுஜர் புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்தனர்.