பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு குரு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2017 02:02
உளுந்துார்பேட்டை : பாதுார் அபிதாகுஜாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு குரு பூஜை நடந்தது. முதலாமாண்டு குரு பூஜையினை ராமகிருஷ்ண ஆசிரம தலைவர் அனந்தானந்த மகாராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உளுந்துார்பேட்டை தாலுகா பாதுார் அபிதாகுஜாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பரம்பரை அறங்காவலரான அருணாச்சல சிவாச்சாரியார் முதலாமாண்டு குரு பூஜை நடந்தது. குரு பூஜையினை ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரம தலைவர் அனந்தானந்த மகாராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அப்போது படத் திறப்பு விழா மற்றும் பஞ்சலோக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவாச்சாரியார்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.