தொன்போஸ்கோ திருஉடல் பெட்டகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2011 10:10
காரைக்கால் : காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்ட, 150 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட புனிதர் தொன்போஸ்கோவின் திருஉடல் பெட்டகம், நெடுங்காடு தொன்போஸ்கோ பள்ளியில் வைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காரைக்கால் அடுத்த நெடுங்காடு தொன்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் 1.30 மணிக்கு புனிதர் தொன் போஸ்கோ உடல் திருவுருவப் பெட்டகம் வந்தடைந்தது. இதை குரும்பகரம் பங்கு தந்தை வேளாங்கண்ணி சவேரிதாஸ் மற்றும் பள்ளி தாளாளர் பால்ராஜ்மணியம் தலைமை தாங்கி வரவேற்றனர்.மேடையில் வைக்கப்பட்ட திருஉருவ பெட்டகத்திற்கு அமைச்சர் சந்திரகாசு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். புனிதர்களின் உடலில் மீதமுள்ள உறுப்புகள் புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது.சமய வல்லுநர்களின் கூற்றுக்கிணங்க, அவ்வாறு எடுக்கப்பட்ட புனிதர்களின் உடல் உறுப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தொன்போஸ்கோவின் வலதுகரம் புனிதப் பொருளாக கருதப்படுகிறது. இத்தாலி நாட்டை சேர்ந்த இவர் 1815ம் ஆகஸ்ட் 16ம் நாள் பெக்கி என்ற குக்கிராமத்தில் பிறந்தார். தன் மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். இவர் தாய் மார்கிரேத் மரியாளின் பராமரிப்பில் வளர்ந்தார். இவர் சிறுவர்கள், அனாதைகள், ஏழைமக்களுக்கு கல்வி நிலையங்கள் தொடங்கினார். இவரை பின்பற்றிய மதகுருமார்கள்,சேவை செய்பவர்கள், சலேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இவரின் மறைவிற்கு பிறகு அவரது வலதுகரம் 150 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொன்போஸ்கோ சபை நிறுவி 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 2009ல் அவரது வலதுகரம் தொன்போஸ்கோவின் மெழுகு சிலையில் பொருத்தப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக உலகில் உள்ள 132 நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றது.