பதிவு செய்த நாள்
10
பிப்
2017
02:02
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுவட்டார கோவில்களில், தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தன.தைமாதத்தில் வரும் பூசம் நட்சத்திரத்தில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்துக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே காப்பு கட்டி, மலைமேல் இருக்கும் முருகனை வழிபடுவதற்காக பல்வேறு காவடிகள் சுமந்தும், அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு நடைபாதையாக சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று தைப்பூசத்திருவிழா முருகன் கோவில் மட்டுமல்லாமல் அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்பட்டது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு தீபாரதனையும் காட்டப்பட்டது.
மடத்துக்குளம் அருகேயுள்ள பாப்பான்குளத்திலுள்ள ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச பால்காவடி திருவிழா மற்றும் ஆயிரம் படி பாலாபிேஷக பெருவிழா நடந்தது. காலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, திரவிய சம்ஸ்ஹாரம் வழிபாடு, துர்க்கா லட்சுமி ஹோமம், இடும்பன் - கடம்பன் பூஜை, காவடி, பால்குடங்கள் பூஜை இடம்பெற்றன.விழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சேவல் காவடி, சர்ப்பக்காவடி, திருமஞ்சனக்காவடி மற்றும் மயில் உள்ளிட்ட, 24 வகையான காவடிகளை எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்னர்.காலை, 9:00 மணிக்கு பால் காவடி புறப்பாடு, வீதி வலம் வருதல் மற்றும் சேருதலும், தொடர்ந்து ஞான விநாயகர், ஞனா தண்டாயுதபாணிக்கு பால் அபிேஷகமும், ராஜ வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனையும் நடந்தது.தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.