கொடைக்கானல், பழநி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் மற்றும் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி, திரளான பக்தர்கள் இவ்விரு கோயில்களுக்கும் சென்று வழிபடுவர். பல பகுதிகளிலிருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அரோகரா கோஷங்களுடன், குறிஞ்சியாண்டவரையும், குழந்தை வேலப்பரையும் வணங்கி, நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். நேற்றும் திரளான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வழிபட்டனர். குறிஞ்சியாண்டவர் தங்க கவசம் அணிந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு கோலத்தில் அருள் பாலித்தார்.