பதிவு செய்த நாள்
11
பிப்
2017
12:02
வெண்ணைமலை: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.கடந்த, 1 முதல் தைப்பூச விழா துவங்கியது. தினமும், பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 8 அன்று காலை, 10:00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 5:45 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். பல்வேறு அபிஷேகங்களுக்குப் பின், சந்தன காப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் முருகப்பெருமான் நேற்று மாலை, 4:30 மணிக்கு திருத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி, நான்கு மாட வளாகத்தில் திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை, 9:15 மணிக்கு மேல், தேனுதீர்த்தத்தில் தீர்த்தவாரியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைகிறது.