பதிவு செய்த நாள்
11
பிப்
2017
01:02
சென்னை: மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோவிலில், தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, 108 பெண் பக்தர்கள் பங்கேற்ற, விளக்கு பூஜை நடந்தது. சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது, முண்டகக் கண்ணியம்மன் கோவில். 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், சுயம்பு வடிவில், அம்மன் அருள் பாலிக்கிறார். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டும், பஞ்ச பூதங்களின் இயற்கை சீற்றங்களினால், மக்கள் அவதிப்படுவதை தடுக்கவும், விளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில், 108 பெண் பக்தர்கள் பங்கேற்று, பூஜை செய்தனர். இதையடுத்து, உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா நடந்தது. அதே போல, திருமுல்லைவாயில் பச்சையம்மன் ஆலயத்திலும், திருவிளக்கு பூஜை நடந்தது.