பதிவு செய்த நாள்
13
பிப்
2017
11:02
திருப்பூர் : திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் நன்மைக்காக, ஸ்ரீஹயக்கிரீவர் சிறப்பு யாகமும், மகா அபிஷேகமும், வீரராகப்பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், ஹயக்கிரீவர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கடந்த, 2014ம் ஆண்டில் இருந்து, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டி, லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, 5ம் தேதி, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாவர்களுக்கான ஹயக்கிரீவர் வழிபாடு நடைபெற்றது. இரண்டாவது முறையாக, பிளஸ் 2 மாவர்களுக்கான சிறப்பு வழிபாடு நடைபெற்றது.காலை, 9:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜையும், 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவர் திருமஞ்சனமும், 11:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனமும், 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இரண்டாவது வழிபாடு நடந்த நேற்று, 700க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்து, வழிபாட்டில் பங்கேற்று மனம் உருக வழிபட்டனர். மாணவர்கள் பெயர் மற்றும் நட்சத்திர பெயரில் அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.பூஜையில் பங்கேற்ற அனைத்து மாவ, மாவியருக்கும், ஹயக்கிரீவர் திருவுருவ ப்படம் மற்றும் மந்திரம் அச்சிடப்பட்ட அட்டை, திருமஞ்சன பொடி, குங்குமம், அர்ச்சனை மலர், பென்சில் பாக்ஸ்,‘இங்க்’ பேனா, பென்சில், ரப்பர், ‘ஷார்ப்னர்’, ‘ஸ்கேல்’, வழிபாடு ரட்சையுடன் கூடிய பை பிரசாதமாக வழங்கப்பட்டது. பிளஸ் 2 மாவர்களுக்கான வழிபாடு நிறைவடைந்துள்ள நிலையில், வரும், 19 மற்றும், 26ம் தேதிகளில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாவர்களுக்கான ஹயக்கிரீவர் கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாவர்களும், பெற்றோரும் வழிபாட்டில் பங்கேற்று, ஹயக்கிரீவரின் அருளுக்கு பாத்திரமாகும்படி, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.