பதிவு செய்த நாள்
13
பிப்
2017
11:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி இந்து சமுதாய ஆன்மிக பேரவை சார்பில், ஹயக்ரீவர் தன்வந்திரி பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி ஹிந்து சமுதாய ஆன்மிக பேரவை சார்பில், ராமானுஜரின் 1000வது ஆண்டு விழா, பஜனை மேளா, தம்பதியினர் பூஜை மற்றும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டி 7 ம் ஆண்டு ஹயக்ரீவர் தன்வந்திரி பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் எதிரில் நடந்த சிறப்பு பூஜையில் பஜனை நிகழ்ச்சி, ராமானுஜரின் படம் மற்றும் பேனா அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவிற்கு ஜெயபால் தலைமை தாங்கினார். சக்ரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ராஜா முன்னிலை வகித்தார். விழுப்புரம் அமராவதி விநாயகர் கோவில் பரம்பரை குருக்கள் பாஸ்கரசிவம் யாகத்தை நடத்தி வைத்தார். டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரி உதவி பேராசிரியர் கார்த்திக்லெனின், சின்னசேலம் மணிவண்ணன் மருத்துவமனை டாக்டர் அருண் ஆகியோர் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து திருக்கோவிலுார் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள், ஆசியுரை வழங்கினார். தமிழ்நாடு சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் குருசுப்ரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பலரும் பங்கேற்றனர். ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன், இணை ஒருங்கிணைப்பாளர் ராம்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.