கொடுமுடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்குழு கூட்டம், கொடுமுடியில் நேற்று நடந்தது. கொடுமுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதைப்போக்க உரிய, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பங்குனி மாதத்தில் ஏமகண்டனூர் ஆற்றங்கரைக்கு தீர்த்தம் எடுக்க வரும் காவடி பக்தர்களிடம், பணம் பறிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், பரிகாரம் பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பொது ஏலம் நடத்தி, பரிகாரம் செய்ய கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.