Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பு மனங்களில் ஆண்டவர்! பெரிய மனிதர்களுக்கு படிப்பினை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவன் நினைப்பதே நடக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
03:02

ஒரு பணக்காரர் மெக்காவிற்கு தனது ஒட்டகத்தில் புனித யாத்திரை புறப்பட்டார். அவருக்கு பணிசெய்ய பல வேலையாட்களும் உடன் சென்றனர். கடும் வெப்பமுள்ள பயங்கர பாலைவனத்தைக் கடந்தே அவர்கள் மெக்காவை அடைய முடியும். வழியில் ஒரு ஏழை சென்று கொண்டிருந்தார். அவரிடம் பணக்காரர், “தம்பி! எங்கே செல்கிறாய்?” என்றார். அவர், தான் மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்வதாகச் சொன்னார். பணக்காரருக்கு சிரிப்பு வந்து விட்டது. “ஏனப்பா! நாங்கள் ஒட்டகங்களில் பயணிக்கிறோம். எப்படியும் மெக்காவை அடைந்து விடுவோம். நீயோ செருப்பு கூட போடாமல் பாலைவனத்தைக் கடக்கப் போவதாகச் சொல்கிறாய். அங்கிருக்கும் சுடுமணலில் உன் கால் வெந்தல்லவா போகும்! உன்னால் எப்படி நடக்க முடியும்?” என்றார் சற்றே கேலி தொனிக்க! “ஐயா! எனக்கு இன்ப துன்பம் பற்றிய கவலையில்லை. என் கருத்தில் இறைவன் மட்டுமே இருக்கிறார்.

நான் அரசனாக இல்லாமல் இருக்கலாம், அதுபோல் என்னைக் கட்டுப்படுத்தவும் எந்த அரசனும் இல்லை. இறைவனே எல்லாமுமுமாக இருக்கிறான். எல்லாப் புகழும் இறைவனுக்கே, எல்லாச் செயல்களும் இறைவனாலேயே நிகழ்கிறது என நம்புபவன். தாங்கள்  புறப்படுங்கள்,” என்று பதிலளித்தான். பணக்காரர் அந்த ஏழையை ஒரு அறிவீனன் எனக்கருதி ஏதும் சொல்லாமல் போய்விட்டார். பாலைவனத்தில் புகுந்ததும் செல்வந்தருக்கு வெப்பத்தைத் தாங்கும் சக்தியில்லை. அவரை கடுமையான வெப்ப நோய் தாக்கியது. பாலைவன சோலை ஒன்றில் தங்கிய அவருக்கு நோய் அதிகமாகி உயிர் பிரிந்து விட்டது. அப்போது, வழியில் சந்தித்த ஏழை அந்த சோலைக்குள் வந்தார். பணக்காரர் இறந்துவிட்டதை அறிந்தார். “என்ன வசதி இருந்தென்ன! இறைவனே எல்லாவற்றையும் செய்கிறான். எல்லாம் அவனே! அவனது அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை,” என்று சொன்னபடியே மெக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar