சிலைகள் கொள்ளை போன பழவூர் கோயிலில் போலீஸ் ஐ.ஜி.,தொல்லியல் துறையினர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2017 01:02
திருநெல்வேலி: ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் மீட்கப்பட்ட பழவூர் கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுபோலீஸ் ஐ.ஜி., மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் நாறும்புநாதசுவாமி கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில்கடந்த 2005 ஜூன் 18ல் அங்கிருந்த ஆனந்தநடராஜர் சிலை உள்ளிட்ட 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயின.இச்சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்பட்டது தெரியவந்தது. சிலை கடத்தலில் ஈடுபட்ட தீனதயாளன், சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.2008ல் 9 சிலைகள் மீட்கப்பட்டன. 4 சிலைகள் இன்னமும் மீட்கப்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுபோலீஸ் ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் பழவூர் கோயிலுக்கு வந்தனர்.அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகளும் இருந்தனர்.கோயிலுக்கு திருப்பியளிக்கப்பட்ட சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உள்ளூர் பொதுமக்களையும்சந்தித்தனர். கோயில் சிலைகள் கொள்ளை போகாமல் தடுப்பதில் உள்ளூர் மக்களும் விழிப்போடு இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.