பதிவு செய்த நாள்
16
பிப்
2017
11:02
பழநி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் உண்டியலில் வழக்கத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக ரூ.2 கோடியே 95 லட்சத்து 53 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் முதல்நாள் ரொக்கமாக ரூ.2 கோடியே ஒரு லட்சத்து மூவாயிரத்து 862ம், தங்கம்-460 கிராம், வெள்ளி-14,600 கிராம், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்-1077 கிடைத்தது. நேற்று இரண்டாம் எண்ணிக்கையில் ரொக்கமாக ரூ. 94லட்சத்து 50ஆயிரத்து 122ம், தங்கம்-100 கிராம், வெள்ளி-1910, வெளிநாட்டு கரன்சி-155 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
3 மடங்கு அதிகரிப்பு: வழக்கமாக 17 நாட்களில் உண்டியலில் ரூ.ஒருகோடி வசூலாகும். இம்முறை தைப்பூசத்தை முன்னிட்டு 12 நாட்களில் மொத்தம் ரூ.2 கோடியே 95 லட்சத்து 53 ஆயிரம் வசூலாகியுள்ளது. இதுவழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகம்.