மாரியம்மன் கோவில் திருப்பணி: இரண்டாம் கட்ட நிதி வழங்கல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2011 10:10
காரைக்கால்:காரைக்கால் கடைத் தெரு மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக 4 லட்சம் ரூபாய் காசோலையை நாஜிம் எம்.எல்.ஏ., வழங்கினார்.காரைக்கால் கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைத்தெரு மாரியம்மன் கோவில் திருப்பணிகள் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மாரியம்மன் கோவில் கருவறையைச் சுற்றி மூன்று புறமும் மண்டபம் அமைக்கும் பணிக்காக இந்து அறநிலையத் துறை 26 லட்சம் ரூபாய் அனுமதித்துள்ளது. இதில் சில மாதங்களுக்கு முன் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.தற்போது இரண்டாம் கட்டமாக ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை, கோவில் திருப்பணிக்குழு தலைவர் கனகராஜ் மற்றும் ஆலய தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோரிடம் நாஜிம் எம்.எல்.ஏ., வழங்கினர். நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் சூரியமூர்த்தி, விஸ்வநாதன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.