பதிவு செய்த நாள்
24
அக்
2011
10:10
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதியின்,17, கண் பார்வையை பரிசோதிக்க, சென்னை கால்நடை கல்லூரியின் நிபுணர் குழுவை அழைப்பது குறித்து, இன்று முடிவு எடுக்கப்படுகிறது. இக்கோவிலில், 2002 முதல் பார்வதி சேவை செய்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன், புனித நீர் எடுத்து வரும்போது, திடீரென்று மிரண்டு ஓட்டலுக்குள் புகுந்தது. பின், மிரளாமல் இருக்க, தினமும் காலை, மாலையில், ஆடி வீதிகளில் "வாக்கிங் அழைத்துச் செல்லப்பட்டது. பாதங்களில் புண் ஏற்படாமல் இருக்க, மண் தரை அமைக்கப்பட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை, டாக்டர் செக்கப் செய்கிறார். சில நாட்களுக்கு முன், சோளத் தட்டையை சாப்பிடுகையில், எதிர்பாராதவிதமாக வலது கண்ணில் குத்தியதில், பார்வை குறைபாடு ஏற்பட்டது. தற்போது, ஓரளவு குணமடைந்தாலும், பார்வதிக்கு பழைய பார்வை கிடைக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்ய, சென்னை கால்நடை கல்லூரி கண் பிரிவு டாக்டர் ரமணி தலைமையிலான குழுவை அழைப்பது குறித்து, இன்று மாலை கோவில் டாக்டர்கள் முடிவு எடுக்கின்றனர்.
3 ஆண்டுகளுக்கு பிறகே உலா : அழகர் கோவில் யானை ஆண்டாள், தொடர்ந்து பிரச்னை செய்ததால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி, தற்போது, சேலத்தில் பராமரிக்கப்படுகிறது. மேலும், ""ஆண்டாள் ஓய்வு எடுக்கும் இடத்தில், மண் தரைதான் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.