பதிவு செய்த நாள்
17
பிப்
2017
11:02
ஆர்.கே.பேட்டை: பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, வரும் மாசி மாதம், 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 18 நாள் உற்சவத்திற்கு பின், தர்மர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது.
பொதட்டூர்பேட்டை, பொன்னியம்மன் கோவில் வளாகத்தை ஒட்டி உள்ளது, திரவுபதியம்மன் கோவில். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீ மிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மார்ச், 2ம் தேதி காலை, கொடியேற்றத்துடன், திருவிழா துவங்குகிறது. 19 நாட்கள் மகாபாரத சொற்பொழிவும், 11 நாள் தெருக்கூத்தும் நடக்கிறது. மார்ச் மாதம், 17 வெள்ளிக்கிழமை மதியம், 12:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு; 19 காலை, துரியோதனன் படுகளமும், அன்று இரவு, தீ மிதி திருவிழாவும் நடைபெறும். இதற்காக, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர். மார்ச் 20ம் தேதி காலை, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.