திருக்கோவிலுார் : வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ உழவாரப் பணிக்குழுவினர் துாய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ விழுப்புரம் நம்பி ஆரூரான் உழவாரப்பணிக் குழுவினர் நேற்று துாய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முத்துசாமி சிவனடியார் தலைமையில் வந்திருந்த 30க்கும் மேற்பட்ட சிவபக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள செடிகளை அகற்றி உழவாரப்பணியை மேற்கொண்டனர். இந்தக்குழுவினர் மாதம் ஒரு கோவில் வீதம் உழவாரப்பணி செய்து வருகின்றனர்.