பழநி: பழநி ஞானதண்டாயுத பாணி சுவாமி மலைக்கோயில் உண்டியலில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் போடப்படுகின்றன. அவற்றை மாற்ற முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.மலைக்கோயிலில் 17 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. இதில், சராசரியாக ஒரு கோடி ரூபாய் முதல் 1.5 கோடி வரை வசூலாகும்.தைப்பூச விழாவை முன்னிட்டு 12 நாட்களில் இரண்டு கோடி 95 லட்சம் வரை வசூலானது. கடந்த இரண்டு மாதங்களில் உண்டியலில் 500, 1000 நோட்டுகள் ஐந்து லட்ச ரூபாய்க்கு மேலாக உள்ளன. இதே போல பத்து ரூபாய் நாணயங்களும் அதிகளவில் போடப்படுகின்றன. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், உண்டியலில் போடப்பட்ட 500, 1000 நோட்டுகளை இருப்பு வைத்துள்ளோம். அவற்றை மாற்ற அனுமதி கேட்டு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.