பதிவு செய்த நாள்
20
பிப்
2017
12:02
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து விட்டு செல்கின்றனர். இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மலைக்கோவிலில் வசிக்கும் குருக்கள், கடைக்காரர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், 3 கி.மீ., கீழே இறங்கி வந்து, ஏ.டி.எம்., மையம் மற்றும் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.எனவே, பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் கோவில் குருக்கள் நலன் கருதி மலைக்கோவில் வளாகத்தில், அரசு, தனியார் வங்கிகளின், ஏ.டி.எம்., மையமே அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.