மேட்டுப்பாளையம்: சிறுமுகையை அடுத்த ஆலாங்கொம்பில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் கடந்த, 15 நாட்களுக்கு முன் நடந்தது. தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. உலக நன்மைக்காகவும், குடும்ப நலன்களுக்காகவும் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பூஜையை மூலத்துறை சக்திவேல் நடத்தினார்.