சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா: இன்று பூச்சாட்டுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2017 12:02
ஈரோடு: சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா இன்றிரவு துவங்குகிறது. ஈரோடு சூரம்பட்டியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம், பொங்கல் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா பூச்சாட்டுதல், இன்று இரவு, 8:00 மணிக்கு துவங்குகிறது. வரும், 26ல், அம்மன் முத்துப் பல்லக்கு வீதி நடக்கிறது. வரும், 28ல் குண்டம் பற்ற வைத்தல், மார்ச், 1ல் குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.