இடைப்பாடி: கவுண்டம்பட்டியில், தீர்த்தக்குடம் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மன் கோவிலில், நேற்று மாசி திருவிழா துவங்கியது. அதில், கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, ஊர்கவுண்டர் முருகையன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், தீர்த்தக்குடங்கள் எடுத்து, கோவிலை வந்தடைந்தனர். அந்த புனிதநீர் மூலம், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.