பதிவு செய்த நாள்
23
பிப்
2017
12:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு கம்பம் நடப்பட்டது. சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையத்தில், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வோராண்டும் மாசி மாதம் குண்டம் விழா நடக்கிறது. இந்த ஆண்டு குண்டம் விழா கடந்த, 14ல், பூச்சாட்டுதலோடு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டது. கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் குங்கும் வைத்து பெண்கள் வணங்கினர். மார்ச், 1 அதிகாலையில், கோவில் முன், 60 அடி நீள தீக் குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிப்பர். இதையடுத்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. அதேநாள் காலை, 10:00 மணியளவில் மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் அக்னி கும்பம் எடுக்கின்றனர். இரவு, 7:00 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் நகர்வலம், வாண வேடிக்கை நடக்கிறது.