மஹா சிவராத்திரி: திருவள்ளூர் கோவில்களில் 63 வகை அபிஷேகங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2017 11:02
திருவள்ளூர் : திருவள்ளூரைச் சுற்றி உள்ள சிவன் கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.மாசி மாதம் மஹா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவ விஷ்ணு கோவிலில் நான்கு கால பூஜை நடக்கிறது.மணவாளநகர் நால்வர் திருமடத்தை சேர்ந்த சிவனடியார்கள், இன்று தேவாரம், திருவாசகம் ஓதி அபிஷேக ஆராதனை நடத்தி, சிவ வழிபாடு செய்கின்றனர். மேலும், 63 வகை அபிஷேகங்கள் நடக்கின்றன. செவ்வாப்பேட்டை அடுத்த தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சியம்பாள், தடுத்தாட்சீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.